அனுராதபுர மாவட்டத்தில் பெரும் போகத்திற்கான பசளை விநியோகம் ஆரம்பம்!

அனுராதபுர மாவட்டத்தில் பெரும் போகத்திற்கான பசளை விநியோகம் ஆரம்பம்!

அனுராதபுர மாவட்டத்தில் பெரும் போக நெல் உற்பத்திக்கு தேவையான பசளைகள் வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அனுராதபுர மாவட்டத்தில் இம்முறை பெரும் போகத்தின் போது 1,20,000 ஹெக்டேர் காணிகளில் நெல் உற்பத்தி மற்றும் உப பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் ஆர்.எம் வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.


$ads={2}


இதற்காக 32,000 மெட்ரிக் தொன் பசளைகள் விவசாய சேவை திணைக்களத்தின் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளன. அத்துடன் மாவட்டத்தில் இம்முறை மரக்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியானது 66,000 ஹெக்டேர் காணிகளில் செய்கை பண்ணப்படவுள்ளன.

மாவட்டத்தின் அநேகமாக இடங்களில் நெல் வேளாண்மைக்கான ஆரம்பகட்ட வேலைகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதோடு, சில நீர் தேக்கங்களில் நீர் மட்டம் போதாமையால் வேளாண்மைக்கான அனுமதி தாமதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் நியூஸ் செய்தியளர் முஹம்மட் ஹாசில்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post