வீதிகளில் இறந்து கிடப்பவர்கள் கொரோனா தொற்றால் இறப்பதாக பொய் பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

வீதிகளில் இறந்து கிடப்பவர்கள் கொரோனா தொற்றால் இறப்பதாக பொய் பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!


நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீதிகளில் கொரோனா தொற்றாளர்கள் உயிரிழப்பதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நபர்களை கண்டறிவதற்கு விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கொழும்பில் இன்று (13) பிறபகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.


$ads={2}


தற்போதைய நிலையில் நாட்டில் 48 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரமே நபரொருவர் வீதியில் உயிரிழந்த கிடந்த நிலையில் கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post