வேகமாகப் பரவிவரும் எலிக்காய்ச்சல்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வேகமாகப் பரவிவரும் எலிக்காய்ச்சல்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!


கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் எலி காய்ச்சல் வேகமாக பரவிவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.


2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை எலி காய்ச்சல் காரணமாக நாட்டில் 4,500 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 50 மரணங்கள் பதிவாகியிருந்தன.


$ads={2}


எனினும் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதி வரையில் 6,900 பேர் எலி காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.


இத்தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெற பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post