பொலிஸாரால் அதிரடியாக முடக்கப்பட்ட பஸ்! காரணம் இதுதான்

பொலிஸாரால் அதிரடியாக முடக்கப்பட்ட பஸ்! காரணம் இதுதான்

சமூக இடைவெளியை உறுதிப்படுத்த தவறிய குற்றச்சாட்டுக்காக தனியார் துறையினருக்கு சொந்தமான பஸ்ஸொன்றை கைப்பற்றிய பொலிஸார், பஸ்ஸின் சாரதியையும், நடத்துனைரையும் கைதுசெய்துள்ளனர்.

பஸ்ஸில் சமூக இடைவெளியை சாரதியும், நடத்துனரும், உறுதி செய்யத் தவறியதாக பயணிகள் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளபபட்டுள்ளது.

கொழும்பு - மதுகம வரை இயங்கும் பஸ்ஸொன்றையே பொலிஸார் இவ்வாறு கைப்பற்றியுள்ளனர்.


$ads={2}


பயணிகள் பானதுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததாகவும், பானதுர பொலிஸார் பஸ்ஸை கைப்பற்றியதுடன் சாரதியையும் நடத்துனரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸமா அதிபருமான அஜீத் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் மற்றும் சமூக இடைவெளியை மீறிய சட்டங்ளின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரை முகமூடி அணியத் தவறியமை மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக 221 பேர் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post