
அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இது போன்ற கேலிச்சித்திரங்களால் மக்கள் அதிர்ச்சியடையக்கூடும் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனால், வன்முறையை நியாயப்படுத்த இதனை நான் செய்ததாக கூறும் கூற்றை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்று அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நீஸ் நகரத்தில் உள்ள தேவாலயத்தில் மூன்று பேர் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததையடுத்து தாக்குதல் தொடுத்த நபர் பயங்கரவாதியாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார்.
"நம்முடைய சுதந்திரங்களையும், உரிமைகளையும் பாதுகாப்பது என் கடமையாக நான் கருதுகிறேன்." என்றும் மக்ரோன் கூறியுள்ளார்.