ஒன்பது பேரை கொலை செய்யப் போவதாக கூறி, துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்!!

ஒன்பது பேரை கொலை செய்யப் போவதாக கூறி, துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்!!

பொலிஸ் நிலையப் பொறுப்புதிகாரி உள்ளிட்ட ஒன்பது பேரை கொலை செய்யப் போவதாக கூறிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதிகாரபூர்வ ஆயுதத்துடன் தலைமறைவாகியுள்ளார்.


இரத்தினபுரி – குருவிட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தலைமறைவாகியுள்ளார்.


நேற்று முன்தினம் சிரிபாகம பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஆயுதத்துடன் தலைமறைவாகியுள்ளார்.


$ads={2}


இவ்வாறு ஆயுதத்தை எடுத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் குருணாகல் பிரதேசத்திற்கு ஆயுதத்தையும் எடுத்துச் சென்று தனது உறவினர்களிடம் ஒன்பது பேரை கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார்.


இந்த ஒன்பது பேரில் குருவிட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நபரை கைது செய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post