பெண் என்பவளை வெறுமனே உறைவிடமாகவோ, மோகப்பொருளாகவோ இன்றி நேர்கொண்ட பார்வை கொண்டு காணவேண்டும்! -சப்னா பஸ்லூன் (SEUSL)

பெண் என்பவளை வெறுமனே உறைவிடமாகவோ, மோகப்பொருளாகவோ இன்றி நேர்கொண்ட பார்வை கொண்டு காணவேண்டும்! -சப்னா பஸ்லூன் (SEUSL)


பெண்களும் சமூக மாற்றமும்!

ஆண் - பெண்ணென இரு உயிர்கள் சேர்ந்து உருவாகும் விதையின் விருட்சமான சமூகத்தில், அதன் உருவாக்கத்தின் ஊற்றாய் பெண் இருக்கின்றாள் என்றால் அது மிகையாகாது.

போஷித்து பண்படுத்தி வெளிப்படுத்தும் கைங்கரியம் பெண்ணிலே இயல்பாக அமைந்து விட்டதாலோ என்னவோ.. அவள் வெறுமனே உணர்ச்சிகளின் உறைவிடமாகவோ, மோகப்பொருளாகவோ இன்றி நேர்கொண்ட பார்வை கொண்டு காணவேண்டும். 

ஒவ்வொரு பெண்ணும் அவள் கொண்டிருக்கும் பொறுப்பு சுமைக்கேற்ப சாதனைப் பெண்ணாகவே இருக்கின்றாள்.

"பெண் தனது வலதுகரத்தால் தொட்டிலை கட்டுவாள். தன் இடக்கையால் உலகையே உலுக்குவாள்.” என்கின்ற கருத்தைப் பறை சாற்றும் வகையில் பெண்ணின் முழுமையான பங்களிப்பின் மூலமே இச்சமூகத்தின் முன்னேற்றம் தங்கியிருக்கிறது. 

பெண்ணின் பராமரிப்பும், வழிநடத்தலும் ஒரு ஆணின் சமூகச் செயற்பாட்டை செதுக்குகின்றது. உலகம் உயிர்க்கும், பூங்காவனத்தின் வசந்தத்தை வீசச் செய்யும் உன்னதமான திரவியமாக அருஞ்சொத்தாக பெண்ணின் வகிபங்கை அல்லாமா இக்பால் குறிப்பிடுகிறார்.

மனித இன வரலாற்றில் சமூகப்புரட்சியின் முகவர்களாக வரும், இருந்த இடமே தெரியாமல் சாம்ராஜ்யங்கள் மறைந்து போகவும் ஆணுடன் பெண்ணும் உறுதுணையாக இருந்திருக்கிறாள் என்பது வரலாற்றில் கண்கூடுடாக காணலாம்.

$ads={2}

தற்காலநிலையில் சில பிரதேசங்களில் உயர்கல்வியைத் தொடரும் பெண்களை மட்டுமே திறமை கொண்டவர்களாக மதிக்கும் மனநிலை காணப்படுகிறது. வீட்டுப் பெண்களின் நிலையின் பரிதாபகரமான நிலை தொடர்கிறது. சமைத்து சமைத்து சமையலறையில் சமாதியாகும் நிலையும் இவர்களால் ஏற்படும் இடைவெளியை நிரப்ப முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

இருப்பினும் பல்வேறு கைத்தொழில் மற்றும் உற்பத்தி ப்பொருட்களை செய்தும், வீட்டில் கற்றுக்கொடுக்கும் நிலை காணப்படுகிறது. அவர்களது சமூகப் பாத்திரத்தை வார்த்தெடுக்கவும், வளப்படுத்தும் தேவை சமூகத்தின் முக்கிய புள்ளிகளுக்கு காணப்படுகின்றது.

என்றாலும் உயர்க்கல்வி வரை கற்ற பெண்களின் நிலை குறித்தும் அவர்களின் மூலம் சமூகக்கட்டமைப்புக்கு ஆற்றும் பங்களிப்பு குறித்தும் நோக்குவது அவசியமானது. மகளிர் வலுவூட்டும் திட்டங்கள், வாழ்வியல் வழிகாட்டல்கள் என பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதும் சிறந்த ஆளுமைகளை வீட்டிலிருந்தே உருவாக்கிச் செதுக்கவும் உயர் இலட்சியம், தூர நோக்கு சீரிய சிந்தனையுடன் வாழ சமூகத்தில் நிலவும் உழுத்துப்போன பாரம்பரியங்களை தகர்த்தெறிந்து, நகை ஆபரணங்கள், தீஞ்சுவை உணவு கொண்டே திருப்திப்படாது அவர்களில் அளப்பரிய பொறுப்புக்களை முன்னோக்கி வேண்டும்  இதை துறைசார்ந்தவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

கண்ணீரால் நனைந்த தலையணைகள் புடவைகொண்டு மறைத்த தழும்புகள் என அவ் அவலங்களில் இருந்து அவளில் சாதனைப்பயணம் தொடர வேண்டும். கண்ணீர் பெண்ணின் பலம் கொண்டு மனத்திடத்தை கூர்படுத்தும் ஆயுதமாக பயன்படுத்தி வேண்டும்.

$ads={2}

ஒரு பெண் தான் சார்ந்த துறையின் அறிக்கம்பத்தை எட்டிப்பிடிக்க அவளது பின்புலத்தில் அவளது தந்தையோ அவளது சகோதரனோ கணவனோ பின்புலத்தில் இருந்து உந்துதலளிக்க வேண்டும். 

பெண்ணானவள் எந்த துறை சார்ந்தவராக இருப்பினும் அவளது முழுமுதற்கடமையாக குடும்பத்தை அமைதி பெறும் பூங்காவனமாக ஆக்கி அன்புள்ளம் கொண்டாரா கவரும், சகோதரியாய், துணைவியாய் இருப்பதோடு மகிழ்வோடும் திருப்தியோடும் நிறைவேற்றி வர வேண்டும்.

தனக்கான சுய அடையாளங்களை அடகு வைத்து பிற அடையாளங்களை தேடாமலும் தெளிவான சிந்தனை வினைதிறனான வேலைகள் சுய தொழில் கொண்டு ஒப்பனை செய்து கொள்ள வேண்டும். 

அழகு சாதன நிலையங்களில் அழகை விற்றுத் திரியாய்லும் இலத்திரனியல் திரைகளில் காலத்தை கழித்து வீணாக்க கூடாது.

மேலும் அவளது கல்வி சமூகத்தின் கல்வியில் தங்கியுள்ளது. மாறி வரும் உலகில் புதுமை இருப்பை நிலைப்படுத்தவும் உலகில் ஒரு கடைக்கோடியில் இருந்து ஒரு உயிர்பெற்று இன்னொறு ஆளுமை தோன்ற பல காலம் செல்கின்றது. 

திறமையான பெண்களின் கல்வியைத்தொடர ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். 

ஒரு விஷேட பெண் வைத்தியரினால் எத்தனை பெண்களின் வெட்கம் கண்ணியம் பாதுக்காக்கபடுகிறது. மாணிக்கக் கற்களாக பாதுகாப்பவர்களது செயற்பாடுகளை இடுத்துரைக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக பெண் என்பவள் மென்மையின் அடையாளம் மட்டுமல்ல.
அவள் பொறுமை, தியாகம், விடாமுயற்சி, தூரநோக்கு, சாணக்கியம் என அனைத்தையும் விட தாய்மையின் வலியை அவளால் மட்டுமே உணர முடியும் என்பதை மறுப்பதற்கில்லை.

"வழித்தடம்"- All University Muslim Student Association 
Safna Fasloon
South Eastern University of Srilanka

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post