நாட்டில் டெங்கு மற்றும் கொரோனா ஆகிய இரண்டுக்கும் இலக்கான முதல் நோயாளி நெகம்போ மருத்துவமனையில் பதிவாகியுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
29 வயதுடைய குறித்த நோயாளர், மீன் சந்தையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிறுப்பதாக நீர்கொழுமொஉ டெங்கு மையத்தின் தலைவர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
$ads={2}
"நோயாளி அதிக காய்ச்சலுடன் வந்தார், நாங்கள் அவரை ஆன்டிஜென் பரிசோதனையின் மூலமாகவும், கொரோனாவுக்கு பி.சி.ஆர் பரிசோதனையும் செய்தோம். மூன்றாம் நாளில் டெங்கு சோதனை சாதகமாக வந்தாலும், பி.சி.ஆர் சோதனை முடிவுகள் 5 ஆம் நாள் வந்தது” என்று டாக்டர் பெர்னாண்டோ சண்டே டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.
நோயாளி டெங்கு தொடர்பாக மருத்துவ ரீதியாக நிலையானவராக இருப்பதால், அவர் தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனத்திற்கு (NIID) மாற்றப்பட்டார்.