கொரொனாவினால் மரணித்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து காசு பிடுங்கும் அரசு!! அனுர குமார குற்றச்சாட்டு!

கொரொனாவினால் மரணித்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து காசு பிடுங்கும் அரசு!! அனுர குமார குற்றச்சாட்டு!

கொரொனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் குடும்பங்களிடமிருந்து அரசாங்கம் 20,000 ரூபாவினை அறவீடு செய்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரொனா நிதியத்தில் 1,640 மில்லியன் ரூபா பணம் திரட்டப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் ஏன் இவ்வாறு இறந்தவர்களின் குடும்பத்தினரிடமிருந்து பணம் அறவீடு செய்கின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையில், இந்த நிதியத்திலிருந்து அரசாங்கம் வெறும் 16 வீதமான தொகையை மட்டுமே செலவிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}

கொரொனா தொற்றால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தாரிடம் 20,000 ரூபா பணம் அல்லது சவப்பெட்டியொன்றை கொண்டுவந்து தருமாறு கோரப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொரொனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களிடம் இவ்வாறு பணம் அறவீடு செய்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செலவினை அரசாங்கமே ஏற்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post