50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு! பெயர்ப்பட்டியல் வெளியானது!

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு! பெயர்ப்பட்டியல் வெளியானது!

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மேலும் சில பட்டதாரிகளின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பட்டதாரிகளில் சிலருக்கு பல்வேறு காரணங்களினால் வேலைவாய்ப்பு நிராகரிக்ப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வாறு வேலைவாய்ப்பு நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

$ads={2}

இதன் அடிப்படையில் தொழில் மற்றும் ஊழியர் சேமலாப நிதி ஆகிய காரணங்களினால் வேலைவாய்ப்பு நிராகரிக்கப்பட்டதாக மேன்முறையீடு செய்தவர்கள் தொடர்பிலான பட்டியலே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த மேன்முறையீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளோர் ஆகிய விபரங்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன.

அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் www.pubad.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக இந்த பட்டியலை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post