நாட்டில் உயிரிழக்கும் அனைவருக்கும் PCR பரிசோதனைகள் அவசியமில்லை! சுகாதார தரப்பு தெரிவிப்பு!

நாட்டில் உயிரிழக்கும் அனைவருக்கும் PCR பரிசோதனைகள் அவசியமில்லை! சுகாதார தரப்பு தெரிவிப்பு!

நாட்டில் உயிரிழக்கும் அனைவருக்கும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்க வேண்டிய அவசியமில்லை என சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய அதிகாரி சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா பரவல் அச்சநிலைமை காணப்படும் பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உயிரிழக்கும் நபர்களுக்கு மாத்திரம் PCR பரிசோதனைகள் முன்னெடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}

இதேபோன்று, தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களின் உறவினர்கள் எவரேனும் ஒருவர் உயிரிழந்தால், அவருக்கு PCR பரிசோதனைகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் வைத்திய அதிகாரி சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post