தனிமைபடுத்தல் ஊரடங்கு அனுமதிபத்திரம் பெற்றவர்களுக்கான விசேட அறிவித்தல்!

தனிமைபடுத்தல் ஊரடங்கு அனுமதிபத்திரம் பெற்றவர்களுக்கான விசேட அறிவித்தல்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காலத்தில் வழங்கப்பட்ட அனுமதிகளை பயன்படுத்தி முடக்கல் நிலையிலுள்ளபகுதிகளுக்குள் பயணிக்கவோ அல்லது அங்கிருந்து வெளியேறவோ முடியாது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

முடக்கல் நிலையில் உள்ள பகுதிகளுக்குள் பயணிக்க சிறப்பு அனுமதிதயைப் பெற சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும்.

அதன்படி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு செல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதலுடனும், சில நிபந்தனைகள் அடிப்படையிலும் மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.


$ads={2}

இதேவேளை அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதற்காக கடுமையான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து ஊழியர்களை கடமைக்கு அழைப்பதற்கு சுகாதார அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

கொவிட் வைரசு தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட பல பிரதேசங்களில் கடுமையான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த பிரதேசங்களில் அல்லது இந்த பிரதேசங்களிலிருந்து வெளியிடங்களுக்கு பொதுமக்களின் பயணங்களுக்கு கடுமையான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

$ads={2}
இதன் காரணமாக நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதற்காக அவசியம் தேவையான ஊழியர்களை மாத்திரம் மேலே குறிப்பிட்ட பிரதேசங்களிலிருந்து அழைக்க முடியாமை பிரச்சினையாக அமைந்துள்ளது.

இந்த நிலைமையை தவிர்ப்பதற்காக நாட்டின் ஏதேனும் பிரதேசங்களில் இருந்து அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் ஊழியர்களை அழைப்பது அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் அது தொடர்பான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்து அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு அமைவாக அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post