கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையில் ஒருங்கிணைக்கும் தினசரி கூலித் தொழிலாளர்களில் நாற்பத்தேழு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட ஐந்து குடியிருப்புகளில் வசிப்பவர்களின் தேவைகளை ஒருங்கிணைக்க, அடுக்குமாடி வளாகங்களில் பணியாற்ற 600 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
$ads={2}
முந்தைய நாள் முதல் (08) இவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, இதில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு சுகாதார ஆடைகள் வழங்கப்பட்டு, ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திற்கும் மூன்று பேர் வரை கடமையில் ஈடுபட்டிருந்தனர்.