
ரிஷாட் பதியுதீன் சார்பில் ஆணைக்குழுவில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் இதனை ஆணைக்குழுவுக்கு நேற்று தெரிவித்தார்.
தனது சேவை பெறுநரான ரிஷாட் பதியுதீன் தற்சமயம் தடுத்து வைக்கப்பட்டுள்ள மெகசின் சிறைச்சாலையின் ஈ பிரிவில் 09ஆவது கூண்டிலிருந்து கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டினார்.
குறித்த தொற்றாளர் கந்தக்காடு சிகிச்சை மையத்துக்கு அனுப்பட்டுள்ள போதும், குறித்த ஈ பிரிவில் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ள 38 சிறைக்கைதிகளில் எவருக்கும் இதுவரையில் PCR பரிசோதனைகள் கூட முன்னெடுக்கப்பட்வில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக தனது சேவை பெறுநர் தனிப்பட்ட ரீதியில் விரும்பினாலும், அவர் தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு அவருக்கு Skype தொழிநுட்பம் ஊடாக ஆணைக்குழு நடவடிக்கைகளில் தொடர்புபட அனுமதியளிக்க வேண்டும் என சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கோரினார்.
எனினும், அவ்வாறு Skype தொழிநுட்பம் ஊடாக தொடர்புபட ரிஷாட் பதியுதீனுக்கு ஆணைக் குழு சந்தர்ப்பம் அளிக்கவில்லை.