அலுவலகங்களில் பணியில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்! பெண் பணியாளரை தாக்கிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரும் எதிர்கட்சித் தலைவர்!

அலுவலகங்களில் பணியில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்! பெண் பணியாளரை தாக்கிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரும் எதிர்கட்சித் தலைவர்!

அலுவலகங்களில் பெண்களின் பாதுகாப்பையும் அவர்களது நலன்களையும் உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனமொன்றில் ஆண் ஒருவர் பெண் பணியாளரை தாக்கும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் டுவிட்டரில் பதிவொன்றை இட்டு தனது கருத்தை முன்வைத்துள்ளார் .

$ads={2}

அதில் அவர், இந்த கொடூரமான செயலை அனைவரும் வெறுப்புடன் எதிர்க்கவும், கண்டிக்கவும் வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயலை மேற்கொண்ட நபருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post