பாடசாலைகள் மூடி வைப்பதா? பாடசாலைகளின் இயல்பு நிலை குறித்த கல்வி அமைச்சரின் பார்வை!

பாடசாலைகள் மூடி வைப்பதா? பாடசாலைகளின் இயல்பு நிலை குறித்த கல்வி அமைச்சரின் பார்வை!


கொரோனா அபாயம் நீங்க முற்றாக இரண்டு வருடங்கள் செல்லுமென உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளதாகவும் அவ்வாறான நிலையில், மாணவர்களின் பாடசாலை  வாழ்க்கையை மேலும் முடக்குவதில் அர்த்தம் இல்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


எனவே தற்போதைய பாரிய சவாலுக்கு முகங்கொடுத்து பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


கல்வி அமைச்சில் நேற்று (24) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


$ads={2}


பாடசாலையை மூடி வைப்பதானது மாணவர்களின் எதிர்காலத்தை மூடுவதற்கான அர்த்தமாகும். மாணவர்களின் சுகாதார அச்சுறுத்தலை எதிர்நோக்கியவாறு பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என்பது இதன் அவசியம் இல்லை. 


எனவே, மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாடசாலைகளை நடத்திச் செல்வதற்கு அரசாங்கம் முன்னிலையாகும் என்றார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post