24 மணித்தியாலத்துக்குள் PCR பரிசோதனை முடிவுகளை பெறப்பட வேண்டும்! GMOA கோரிக்கை!

24 மணித்தியாலத்துக்குள் PCR பரிசோதனை முடிவுகளை பெறப்பட வேண்டும்! GMOA கோரிக்கை!


PCR பரிசோதனைகளின் முடிவுகள் 24 மணித்தியாலங்களுக்குள் வெளியிடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன உதவி செயலாளர் வைத்திய கலாநிதி நவீன் டி சொய்சா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


தற்போது பெரும்பாலான PCR முடிவுகளை வெளியிட ஐந்து நாட்கள் செல்கின்றன. ஐந்து நாட்களுக்குப் பின்னர் PCR முடிவுகளை பெறும் போது கொரோனா கட்டுப்பாடு தொடர்பில் எடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகளை அது தாமதப்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


$ads={2}


அதேநேரம் நாள் ஒன்றுக்குள் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும் அவர் உணர்த்தியுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post