கொரோனா மரணத்தால் உயிரிழந்த நபர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக அறிக்கை வெளியிடவுள்ள சுகாதார அமைச்சர்!!

கொரோனா மரணத்தால் உயிரிழந்த நபர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக அறிக்கை வெளியிடவுள்ள சுகாதார அமைச்சர்!!

pavithra wanniarachchi yazhnews

கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் தமக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிபுணர் குழுவினர் தனக்கு பல்வேறு அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.


அத்துடன், கடந்த அமைச்சரவையில் இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதிலும், முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.


$ads={2}


குறித்த விசேட நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அமைய செயற்படுமாறு இதன்போது அமைச்சரவை தனக்கு அறிவித்ததாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.


அதற்கமைய, குறித்த அறிக்கை கிடைத்ததும் அது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post