ஊரடங்கு உத்தரவின் போது பணிக்கு செல்ல அனுமதிப்பத்திரம் அவசியமற்ற நிறுவன பட்டியல் வெளியாகின!

ஊரடங்கு உத்தரவின் போது பணிக்கு செல்ல அனுமதிப்பத்திரம் அவசியமற்ற நிறுவன பட்டியல் வெளியாகின!


ஊழியர்கள் பணிக்கு செல்லும் போது ஊரடங்கு அனுமதிப் பத்திரம் அவசியமற்ற நிறுவனங்களின் பெயர் பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.


அதன்படி, முன்பு 84 ஆக காணப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


குறித்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை மற்றும் தனது நிறுவனத்தின் தலைவரால் வௌியிடப்படும் சேவைக்கு அழைக்கும் கடிதத்தை ஊரடங்கு அனுமதி பத்திரத்திற்கு பதிலாக பயன்படுத்த முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


$ads={2}


இதேவேளை, முதலீட்டு சபையின் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அனுமதியுடன் செயற்படும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் தேவைப்படாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.