அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு 18 பேர் நியமனம்!

அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு 18 பேர் நியமனம்!


ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் அடங்கிய அரசாங்க நிதி பற்றிய குழு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இன்று சபையில் அறிவிக்கப்பட்டது.


இதற்கமைய, கலாநிதி பந்துல குணவர்தன, கெஹலிய ரம்புக்வல, சுசில் பிரேமஜயந்த, விதுர விக்ரமநாயக்க, கலாநிதி சரத் வீரசேகர, டி.வி.சானக, கலாநிதி நாளக கொடஹேவா, அநுர பிரியதர்ஷ யாப்பா, விஜித ஹேரத், டிலான் பெரேரா, கலாநிதி ஹர்ஷ.டி. சில்வா, எம்.ஏ. சுமந்திரன், சமிந்த விஜயசிறி, ஹேஷா விதானகே, இசுரு தொடங்கொட, அநூப பஸ்குவல், எம்.டபிள்யூ.டி. சஹன் பிரதீப் விதான, பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் இக்குழுவுக்குப் பெயரிடப்பட்டுள்ளனர்.


$ads={2}


அரசாங்க நிதி பற்றிய குழுவின் தவிசாளர் அக்குழுவின் அங்கத்துவ உறுப்பினர்களிலிருந்து அக்குழுவினாலேயே தெரிவுசெய்யப்படுவது தொடர்பான பிரேரணையும் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.