நாளை அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம்!

நாளை அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம்!

நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் செயலணி மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}


சிங்கள ஊடகமொன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது பாடசாலைகளை ஆரம்பிக்க முடியுமா என ஒத்திகை பார்ப்பதற்காக அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர்த்து ஏனையப் பகுதிகளிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாடசாலைகளை மீள் ஆரம்பிப்பது தொடர்பில் ஆசிரியர் சங்கம் மற்றும் எதிர்க்கட்சி உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், 11ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகளை மாத்திரம் ஆரம்பிக்குமாறும் ஆசிரியர்கள் சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post