நேற்று பதிவான 9 மரணங்களும் ஒரே நாளில் பதிவானவை அல்ல - இராணுவ தளபதி

நேற்று பதிவான 9 மரணங்களும் ஒரே நாளில் பதிவானவை அல்ல - இராணுவ தளபதி

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று அறிவித்த ஐந்து கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகவில்லை என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று 04 கொரோனா இறப்புகள் மட்டுமே நிகழ்ந்ததாகவும், மற்ற 05 மரணங்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


$ads={2}

அந்த இறப்புகளின் விசாரணை அறிக்கைகளைப் பெற்ற பின்னர், நேற்று மொத்தம் 09 இறப்புகள் பதிவாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

இன்று காலை ஒரு தொலைக்காட்சி சேனலில் நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் கூறினார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post