சிறைச்சாலைகளில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எட்டப்பட்ட தீர்மானம்!!

சிறைச்சாலைகளில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எட்டப்பட்ட தீர்மானம்!!

கொரொனா தொற்று நிலைமை காரணமாக பொரளை மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் இருந்து பாராளுமன்றத்திற்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்ற அமர்வுகளுக்காக அழைக்காமல் இருக்க பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான செயற்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் தலைவர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசன் சந்திரகாந்த், அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஆகியோதை பாராளுமன்ற கூட்டங்களுக்காக அழைக்காமல் இருக்க பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.

$ads={2}

எவ்வாறாயினும், பாராளுமன்றில் வாக்கெடுப்பு ஒன்று இடம்பெறும் சந்தர்ப்பத்தில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post