வெடித்தது சிறைச்சாலை கொத்தணி - 161 கைதிகளுக்கு கொரோனா!

வெடித்தது சிறைச்சாலை கொத்தணி - 161 கைதிகளுக்கு கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவல் சிறைச்சாலை கொத்தணியை உருவாக்கியுள்ள நிலையில், இதுவரை கைதிகள் உள்ளிட்ட 161 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

வெலிக்கடை, போகம்பர, மாத்தறை, குருவிட்ட மற்றும் பூஸா சிறைச்சாலைகளில் கொரோனாத் தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.


$ads={2}

அதற்கமைய கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் இதுவரை 115 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண் கைதிகள் 92 பேருக்கும், ஆண் கைதிகள் 20 பேருக்கும், சிறைச்சாலை அலுவலர்கள் 3 பேருக்கும் வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, போகம்பர சிறைச்சாலை, மாத்தறை சிறைச்சாலை, குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பூஸா சிறைச்சாலை ஆகியவற்றில் இதுவரை 46 கைதிகளுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சிறைக் கொத்தணிகளில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 94 பெண் கைதிகளும், 64 ஆண் கைதிகளும் மற்றும் சிறைச்சாலை அலுவலர்கள் மூவரும் உள்ளடங்குகின்றனர்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post