நாட்டில் 05 இறப்புக்கள் மட்டுமே கொரோனாவால் பதிவாகின! இராணுவத் தளபதி

நாட்டில் 05 இறப்புக்கள் மட்டுமே கொரோனாவால் பதிவாகின! இராணுவத் தளபதி

இலங்கையில் 05 இறப்புக்கள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை எனவும், ஏனையவை நாட்பட்ட நோய்களால் நிகழ்ந்துள்ளன எனவும் கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் இதனை உறுதிப்படுத்தினார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஊரடங்கு மற்றும் முடக்கல் நிலைகளின் போது வீடுகளில் தங்கியிருக்காது தேவையான போது மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

இலங்கையில் ஒரு சிறந்த சுகாதார சேவையுள்ளது. இதனை யாரும் மறுக்கவோ அல்லது மருத்துவ சிகிச்சை பெறுவதைத் தவிர்க்கவோ கூடாது.

$ads={2}

முடக்கல் நிலையில் இருக்கும் போதுகூட அவசர மருத்துவ சேவைகள் தேவைப்படுவோர் அம்புலன்ஸில் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய ஒரு பொறிமுறையை நாங்கள் நிறுவியுள்ளோம்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவருமே இறந்துவிடமாட்டார்கள் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸூக்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டவர்களில், 0.2 சதவீதம் பேர் உயிரிழந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post