லொறியை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி!!

லொறியை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி!!

கால்நடைகளை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை தன்னுடைய காரில் துரத்திச் சென்ற ஆனமடுவ பொலிஸ் நிலைய உதவி அத்தியட்சகர் ஹேமந்த ரட்ணாயக்க விபத்தில் சிக்கி உயிரழந்த பரிதாப சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.


$ads={2}

லொறியை துரத்திச் சென்ற போது அவரது கார் வீதியிலிருந்து விலகி ஆனமடுவ நகரின் மத்தியில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தில் மோதிய போதே இந்த விபத்து இடம்பெற்றது.

கால் நடைகளை லொறி ஒன்றில் சிலர் சட்டவிரோதமாக ஏற்றிச் செல்வதாக கிடைத்த தகவல் ஒன்றையடுத்தே உதவி அத்யட்சகர் தன்னுடைய சொந்தக் காரில் அதனைத் துரத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனமடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் அந்த வேளையில் காரில் இருந்ததாகவும், அவர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post