மலையகம் வந்தவர்கள், திருப்பி அனுப்பப்பட்டனர்!

மலையகம் வந்தவர்கள், திருப்பி அனுப்பப்பட்டனர்!

மேல் மாகாணம் உட்பட கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மலையக பெருந்தோட்டப்பகுதிகளுக்கு இன்று வருகை தந்த வாகனங்களும் அதில் பயணித்தவர்களும் திருப்பியனுப்பட்டனர்.


$ads={2}

மேல் மாகாணத்திலும் நாட்டில் ஏனைய சில பகுதிகளிலும் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டது.

எனினும், வெளிமாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்துகொள்ளுமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

அதேபோல மேல் மாகாணம் உட்பட கொரோனா வைரஸ் பரவக்கூடிய பகுதிகளில் உள்ளவர்கள், தீபாவளி பண்டிகைக்காக மலையக பெருந்தோட்டப்பகுதிகளுக்கு வருகைத்தர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

அதனை மீறி வருவோர் குடும்பத்தோடு சுய தனிமைக்கு உட்படுத்தப்படுவீர்கள் எனவும் சுகாதார வைத்திய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post