பிற்போடப்பட்டுள்ள வழக்குகளுக்கு புதிய திகதிகள் வழங்க தீர்மானம்!

பிற்போடப்பட்டுள்ள வழக்குகளுக்கு புதிய திகதிகள் வழங்க தீர்மானம்!


நாட்டின் கொரோனா பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த வழக்குகளுக்கு புதிய விசாரணை திகதிகளை வழங்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.


இன்று (16) முற்பகல் கொழும்பு மேல் நீதிமன்றில் பிற்போடப்பட்ட அனைத்து வழக்குகளும் மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.


அதன்பின்னர், குறித்த பிற்போடப்பட்ட வழக்குகளுக்கு புதிய விசாரணைத் திகதிகளை நிர்ணயிக்குமாறு நீதிமன்ற பதிவாளர்களுக்கு நீதிபதிகள் பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


$ads={2}


அதேநேரம் பிற்போடப்பட்ட வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படவுள்ள புதிய திகதிகள் மக்கள் பார்வைக்காக நீதிமன்றில் வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post