சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை சம்பந்தமாக கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!!

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை சம்பந்தமாக கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!!


கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு பாட சாலை செயற்பாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டதனால் அடுத்த வருடத்திற்கான விடுமுறைகள் குறைக்கப்பட்டுள்ளன.


இதற்கமைய, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி திங்கட்கிழமை முதல் சனி, ஞாயிறு தினங்கள் உள்ளடங்கலாக ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளன.


$ads={2}


அதன்பின்னர் கல்வி பொது தாராதர சாதரண பரீட்சைக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் 16ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் நடைபெறும் குறித்த காலப்பகுதியில் பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது.


இதனையடுத்து இரண்டாம் கட்டமாக அடுத்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி வரையில் சனி, ஞாயிறு தினங்கள் அடங்கலாகப் பாடசாலைகள் நடத்தப்படவுள்ளன.


அதன்பின்னர் இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜுலை மாதம் 30ஆம் திகதி வரையில் சனி மற்றும் ஞாயிறு தினங்கள் அடங்கலாகப் பாடசாலை செயற்பாடுகள் இடம்பெறும்.


மூன்றாம் தவணை ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் 03ஆம் திகதி வரை பாட சாலை செயற்பாடுகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தவிர, முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை முதலாம் கட்டமாக ஜனவரி மாதம் 04ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரையில் சனி மற்றும் ஞாயிறு தினங்கள் அடங்கலாக இடம் பெறவுள் ளது.


இரண்டாம் கட்டமாக பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 09ஆம் வரை சனி மற்றும் ஞாயிறு தினங்கள் அடங்கலாக இடம்பெறும்.


$ads={2}


இரண்டாம் தவணை மே மாதம் 17ஆம் திகதி ஒகஸ்ட் 25ஆம் திகதி வரை வாரத்தில் ஏழு நாட்களும் நடைபெறும்.

அதன்பின்னர், முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஒகஸ்ட் 26 மற்றும் 27ஆம் திகதிகள் விடுமுறை வழங்கப்பட்டு பின்னர் ஏனைய பாடசாலைகளை போன்று மூன்றாம் தவணை செயற்பாடுகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post