20க்கு ஆதரவளித்த மூன்று எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி? முஸ்லீம் ஒருவரும் உள்ளடக்கம்!

20க்கு ஆதரவளித்த மூன்று எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி? முஸ்லீம் ஒருவரும் உள்ளடக்கம்!


அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்த சமீபத்திய விவாதத்தின் முடிவில், அதற்கு ஆதரவாக வாக்களித்த எதிர்க்கட்சியின் மூன்று உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, அரவிந்த குமார் மற்றும் மேலுமொரு முஸ்லீம் எம்.பி. ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


$ads={2}


பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வில் டயானா கமகே மற்றும் அரவிந்த குமார் ஆகியோருக்கு ஆசனங்களை ஒதுக்குமாறு ஆளும் கட்சியில் இருந்து நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சார்ஜென்ட்-அட்-ஆர்ம்ஸ் நரேந்திர பெர்னாண்டோ ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், எட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post