துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் கால எல்லை நீடிப்பு!

துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் கால எல்லை நீடிப்பு!


துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 2021ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான கால எல்லையே நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


அதன்படி, எதிர்வரும் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரையில் இந்த காலவரையறை நீடிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ள காரணத்தினால், அபராதம் எதுவும் விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா நோய்த் தொற்று காரணமாக உரிய காலத்தில் துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை மீளப் புதுப்பித்துக் கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post