தலைவலி என மருத்துவமனைக்கு சென்ற நபருக்கு கொரொனா தொற்று!

தலைவலி என மருத்துவமனைக்கு சென்ற நபருக்கு கொரொனா தொற்று!

தங்காலை குடாவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

அவர் இதற்கு முன்னர் குடாவெல்ல பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் நெருங்கி செயற்பட்டவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


$ads={2}

கடந்த 9ஆம் திகதி தலைவலி ஏற்பட்டு சிகிச்சை பெறுவதற்காக தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலாவது PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றவில்லை என உறுதியாகியது.

இந்நிலையில் வீடு நோக்கி செல்வதற்கு அவர் தயாராகிய போது அவருக்கு இரண்டாவது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை உறுதியாகியுள்ளது.

அதற்கமைய அவர் கம்புருகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post