மேல் மாகாணத்தில் கொரோனா தீவிரம் - ஆனாலும் மகிழ்ச்சித் தகவல்!

மேல் மாகாணத்தில் கொரோனா தீவிரம் - ஆனாலும் மகிழ்ச்சித் தகவல்!

மேல் மாகாணத்தின் சில பிரதேசங்களில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}

அத்துடன் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் பீசீஆர் பரிசோதனைகள் காரணமாக அந்த பிரதேசங்களில் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் என எதிர்பார்ப்பதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணத்தை தவிர ஏனைய மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் அளவு குறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறிப்பிடத்தக்க அளவு கொரோனா தொற்றாளர்கள் மேல் மாகாணத்தில் விசேடமாக கொழும்பு நகர பிரதேசங்களிலேயே அடையாளம் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post