அரசியல் கைதிகளின் விடுதலை; அமைச்சர் நாமல் வழங்கிய உறுதி மொழி!

அரசியல் கைதிகளின் விடுதலை; அமைச்சர் நாமல் வழங்கிய உறுதி மொழி!

namal rajapaksa

அரசியல் கைதிகள் தொடர்பான விடயத்தில் எதிர்காலத்தில் உரிய பதிலொன்று வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் இன்று (08) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 


அவர் மேலும் குறிப்பிடுகையில்,


“இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் உள்ளிட்ட ஆளும் தரப்பினர் கலந்துரையாடி வருகின்றனர்.


எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலுடனான நிலைமையின் கீழ் இது தொடர்பில் தொடர்ச்சியாகக் கலந்துரையாட முடியாத நிலை காணப்படுகிறது.


ஆனாலும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரான அங்கஜன் உள்ளிட்ட ஆளும் தரப்பினர் கலந்துரையாடி எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளனர்.


$ads={2}


இந்நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டிய தேவையும் காணப்படுகிறது. எனினும், தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.


அத்துடன், சிறைச்சாலைகளிலும் கொரோனா தொற்றாளர்கள் உருவாகியுள்ளனர். ஆகவே எதிர்காலத்தில் இது தொடர்பில் உரிய பதிலொன்று வழங்கப்படும்.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post