
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் விடயம் தொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம், இவ்விடயத்தில் அரசாங்கம் சகல வேறுபாடுகளையும் மறந்து முஸ்லிம் மக்களின் இஸ்லாமிய நெறிமுறைகளை மதித்து ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு ஆவணம் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
"முஸ்லிம் மக்கள் வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கக் கூட அஞ்சுகின்றனர். இவ்வாறான நிலைமையை இல்லாமல் செய்ய அரசாங்கம் சிறந்ததொரு தீர்வை காண முன்வர வேண்டும்.
$ads={2}
ஜனாஸா எரிப்பு விடயத்தில் வெளிநாட்டு அரசாங்கங்கள் அழுத்தம் கொடுத்தும் கூட அதனைப் பொருட்படுத்தாது அரசாங்கம் செயற்படுகின்றது. வெவ்வேறு கலாசாரங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும் இந்நாட்டில் மதங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்." எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.