வயலில் வேலை செய்து கொண்டிருந்த நபர் திடீர் மரணம்!

வயலில் வேலை செய்து கொண்டிருந்த நபர் திடீர் மரணம்!

வயலில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 41 வயதுடைய மாரிமுத்து சுதாகரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


$ads={2}

நேற்று (11) காலை வயலில் வரம்பு வெட்டிக் கொண்டிருந்த வேளை வயலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக இவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணை நடத்தி வருவதுடன் பிரேத பரிசோதனைக்காக உடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பபட்டிருந்தது.

மேலும் கொரோனா வேகமாக பரவி வருகின்ற நிலையில் குறித்த நபரின் திடீர் மரணம் தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post