இலங்கையில் மதரஸா பாடசாலைகளை அடியோடு அளிக்க வேண்டும்! நாடாளுமன்றில் விமல்!

இலங்கையில் மதரஸா பாடசாலைகளை அடியோடு அளிக்க வேண்டும்! நாடாளுமன்றில் விமல்!


இலங்கையில் இயங்கிவரும் அனைத்து மதரஸா பாடசாலைகளை இழுத்துமூட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


நாடாளுமன்றில் இன்று (23) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.


அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


இந்த நாட்டில் இனவாதப் பிரிவுகளை அடியோடு அழிக்கவே 69 லட்சம் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். மதரஸா பாடசாலைகள் என்ற பெயரில் தீவிரவாதத்தை தீண்போட்டு வளர்த்திருப்பது ஆணைக்குழு விசாரணைகளில் இருந்து அம்பலமாகியிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


$ads={2}


எவ்வாறாயினும் கடந்த வாரம் நடந்த நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், மதரஸா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post