தேசிய பட்டியல் ஆசனத்தை நிராகரித்தார் ரணில்; ஆசனத்தின் சொந்தக்காரர் யார்?

தேசிய பட்டியல் ஆசனத்தை நிராகரித்தார் ரணில்; ஆசனத்தின் சொந்தக்காரர் யார்?


பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெறுமாறு கட்சி மூத்தவர்கள் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.


கட்சியின் இளம் உறுப்பினருக்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார்.


நேற்று சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தேசிய பட்டியல் எம்.பி. பதவியை ரணில் கையகப்படுத்தக் கோரி கட்சி மூத்தவர்கள் கையெழுத்திட்டனர்.


இந்நிலையில், கட்சியை மறுசீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்திற்கான தேசிய பட்டியல் உறுப்பினராவதற்கு தேசிய பட்டியலில் இடம்பிடித்துள்ள உறுப்பினருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் மற்ற அனைத்து உறுப்பினர்களும் கட்சியை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


$ads={2}


எவ்வாறாயினும்,ஐக்கிய தேசிய கட்சியின் பல மூத்த உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்க மூத்த அரசியல்வாதி மற்றும் அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் தேசிய பட்டியல் ஆசனத்தை வெல்வதற்கான சிறந்த ஒருவர் என்று தெரிவித்தனர்.


கட்சித் தகவல்களின் படி, அவர் எதிர்வரும் டிசம்பரில் கட்சித் தலைமையிலிருந்து விலகத் தயாராகி வருவதாகவும், ஜனவரி மாதத்திற்குள் புதிய தலைவரை நியமிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


கட்சியின் தற்போதைய துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன தலைவராக நியமிக்கப்படலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post