இராணுவத் தளபதி தலைமையிலான குழுவால் புதிய கிரிக்கெட் குழு நியமனம்!

இராணுவத் தளபதி தலைமையிலான குழுவால் புதிய கிரிக்கெட் குழு நியமனம்!


இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையிலான தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழு புதிய கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு ஏழு உறுப்பினர்களை பரிந்துரைத்துள்ளது.


புதிய குழு இளைஞர் அணிகள் உட்பட அனைத்து தேர்வுகளையும் செய்யும். ஆண்கள் மற்றும் பெண்களின் தேசிய அணிகள் மற்றும் இளைஞர் அணிகள் உட்பட அனைத்து தேர்வு நடவடிக்கைகளுக்கும் இந்த தேர்வுக் குழு பொறுப்பாகும்.


$ads={2}


மேலும் கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த அசந்த டி மெல் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏனைய உறுப்பினர்களாக சமிந்த மெண்டிஸ், பிரமோத்ய விக்ரமரசிங்க, ஹேமந்த தேவப்பிரிய, ரஞ்சித் மதுரசிங்க, உவைஸ் கர்னைன் மற்றும் நில்மினி குணரத்ன போன்றவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 


தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழு பரிந்துரைத்த 7 உறுப்பினர்களைக் கொண்ட கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷ ஒப்புதல் அளிக்க வேண்டும்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post