கொரோனா தொற்றால் மேலும் இருவர் உயிரிழப்பு! -கொழும்பு தேசிய வைத்தியசாலை

கொரோனா தொற்றால் மேலும் இருவர் உயிரிழப்பு! -கொழும்பு தேசிய வைத்தியசாலை


கொரோனா தொற்றால் இன்று (04) மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜெயருவான் பண்டார, 78 வயது ஆண் மற்றும் 79 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார்.

78 வயதானவர் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் 79 வயதான [பெண் வீட்டிலும் இறந்துள்ளனர். இருவரது உடல்களிலும் PCR பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.

$ads={2}

இருப்பினும், 79 வயதானவரின் மரணம் கொரோனவால் நிகழ்ந்ததா என்பது நிச்சயமற்றது எனவும் அவர் கூறினார். இதன்படி கொரோனா இறப்புகள் 24ஆக பதிவாகியுள்ளன என்றார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post