நோயாளிகளை பொறுப்பேற்க மறுக்கும் சுகாதார ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நோயாளிகளை பொறுப்பேற்க மறுக்கும் சுகாதார ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்களை பொறுப்பேற்க மறுப்பு தெரிவிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


நோயாளர்கள் அவ்வாறு திருப்பியனுப்பப்படும் பட்சத்தில் அது குறித்து அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


அவ்வாறான நிலைமைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ​ஹேரத் தெரிவித்துள்ளார்.


$ads={2}


சுகயீனமடைந்தோர் மற்றும் திடீர் சுகயீனமடைவோரை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்லுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


சுகாதார வழிகாட்டல்களுக்கமைய முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் எனவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ​ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.