ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கேள்விகளுக்கு ரிஷாத் பதியுதீனின் பதில்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கேள்விகளுக்கு ரிஷாத் பதியுதீனின் பதில்கள்!


இலங்கையில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில மேற்கொண்ட சதி முயற்சியே ஏப்ரல் 21 தாக்குதல் என முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


மேலும் அவரிடம் விசாரணைக்குழு தொடுத்த கேள்விகளும் அதற்கு ரிஷாத் பதியுதீன் அளித்த பதில்களும் கீழ்வருமாறு,


கேள்வி: துருக்கியில் தடைசெய்யப்பட்ட FETO என்ற அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகளில் தலையிட்டீர்களா?


பதில்: அந்த குற்றச்சாட்டு உண்மையில்லை தனக்கு அந்த அமைப்பை சேர்ந்தவர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லை. மேலும் விசாரணைகளில் தான் தலையிடவுமில்லை.


கேள்வி: கனடாவில் உள்ள உங்கள் சகோதரியின் வீட்டினை தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்தியமை குறித்து அறிந்திருக்கின்றீர்களா? 


பதில்: அதனை நான் அறிந்திருக்கவில்லை. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னரே அதனை அறிந்துகொண்டேன். மேலும் குறித்த வீட்டிற்கு நான் ஒருபொழுதும் விஜயம் மேற்கொள்ளவில்லை.


கேள்வி: உங்கள் தம்பி எப்போதாவது கைது செய்யப்பட்டாரா? 


பதில்: ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டார். சினமன் கிரான்டில் தாக்குதலை மேற்கொண்டவர் எனது சகோதரரிற்கு ஏழு தொலைபேசி அழைப்புகளை விடுத்துள்ளார் என்பதை ஊடகங்கள் மூலமே அறிந்தேன்.


$ads={2}


அதன்பின்னர் நான் எனது சகோதரரிடம் இன்சாப் இனை ஏன் அவர் தொடர்பு கொண்டார் என வினவியபோது அரசாங்கம் செப்பு ஏற்றுமதியை இரத்து செய்தமையால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தே பேச்சுக்களை மேற்கொண்டதாக எனது சகோதாரர் தெரிவித்தார்.


கேள்வி: நீங்கள் மறைமுகமாக இன்சாப் சகோதரர்களுக்கு ஆதரவளித்துள்ளீர்களா? 


பதில்: நான் இந்த குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கின்றேன். இன்சாப்  சகோதரர்களுக்கு நான் எவ்விதத்திலும் உதவவேயில்லை.


கேள்வி: விடுதலைப்புலிகள் வடக்கிலிருந்து வெளியேற்றிய பின்னர் ஐந்து வருடங்கள் முகாமில் அகதியாக வாழ்ந்ததாக தெரிவிக்கின்றீர்கள், நீங்கள் எப்படி அரசியலிற்கு வந்தீர்கள்? செல்வந்தராக மாறினீர்கள்?


பதில்: நான் அகதியாகி விட்டதால் பிச்சை எடுக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை, என்னால் வர்த்தகத்தில் ஈடுபட முடியும்.


கேள்வி: நீங்கள் உங்கள் அமைச்சு பதவிகளை பயன்படுத்தி இவ்வளவு சொத்தினை சேர்த்தீர்களா? உங்கள் குடும்பத்தினையும் வர்த்தகத்தினையும் முன்னேற்றினீர்களா?


பதில்: நான் எந்த வர்த்தகத்தினை முன்னேற்றுவதற்கு எனது அமைச்சு பதவியை பயன்படுத்தவில்லை. என தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.