நேற்றைய தினம் மரணித்தவர்கள் எண்ணிக்கை 09 அல்ல; 04 மாத்திரமே! சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

நேற்றைய தினம் மரணித்தவர்கள் எண்ணிக்கை 09 அல்ல; 04 மாத்திரமே! சுகாதார அமைச்சு தெரிவிப்பு!


மரணங்களின் பின்னர் PCR பரிசோதனைகளுக்காக பெற்றுக் கொள்ளப்படும் மாதிரிகளைப் பெற்ற பின்னர் முடிவுகளைப் பெற்றுக் கொள்ள சற்று தாமதமாவதனால் மரணங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கும் கால தாமதமாகிறது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.


கொழும்பில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,


$ads={2}


நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 09 மரணங்களில் 04 மரணங்கள் அன்றைய தினம் ஏற்பட்டவையாகும். ஏனைய 04 மரணங்கள் 20ஆம் திகதியும் மற்றொன்று 19ஆம் திகதி ஏற்பட்ட மரணமாகும். 


மரணங்கள் பதிவாகிய அன்றைய தினமே அவை தொடர்பில் அறிவிக்க முடியாததால் அனைத்தையும் சேர்த்து வெளியிடும் போது மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைப் போன்று தென்படும் என்றார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post