மனோ கணேசன் ஒரு முட்டாள்! விமல் நாடாளுமன்றில் தெரிவிப்பு!

மனோ கணேசன் ஒரு முட்டாள்! விமல் நாடாளுமன்றில் தெரிவிப்பு!


நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஒரு முட்டாள் என அமைச்சர் விமல் வீரவன்ச இன்றைய தினம் நாடாளுமன்றில் விமர்சித்துள்ளார்.


கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு 15, அளுத்மாவத்தை - இப்பாவத்த பிரதேச மக்கள் தமது பகுதி தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.


அந்த மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச


$ads={2}


ஒரு மாதத்திற்கான நிவாரணக் கொடுப்பனவாக வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாவை ஒரே வாரத்தில் செலவு செய்துவிட்டுத்தான் மேலும் நிவாரணங்களைக் கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.


அத்துடன் இதனைப் பிரச்சினையாக சபை நடுவே கொண்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஒரு முட்டாள் என்றும் அவர் விமர்சிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.