
கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு முகம் கொடுக்கும் மாணவர்களின் பாடத்திட்டம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இணையத்தளம் ஊடாக தகவல் பெறப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
$ads={2}
எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை க.பொ.த சாதாரண தர பரீட்சை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகளை மூன்றாம் தவணைக்காக மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் பாடசாலை ஆரம்பித்தல் மற்றும் எதிர்வரும் நடவடிக்கைகளின் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.