கொழும்பில் கீழ் வானில் பறக்கும் ஹெலிகாப்டர்கள்! மக்கள் பெரும் அச்சத்தில்!

கொழும்பில் கீழ் வானில் பறக்கும் ஹெலிகாப்டர்கள்! மக்கள் பெரும் அச்சத்தில்!


கொழும்பு 15 மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தொடர்ச்சியாக ஹெலிகாப்டர்கள் பயணிப்பதை அடுத்து, பிரதேச மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.


அத்துடன் குறித்த பகுதிகளில் பல ஹெலிகாப்டர்கள் மிகவும் கீழாக தொடர்ந்தும் பயணித்து வருவதை காண முடிகின்றது.


இந்நிலையில், தனிமைப்படுத்தல் பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து அது தொடர்பில் ஆராய்வதற்காகவே ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


$ads={2}


ஏதேனும் சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் அது தொடர்பில் உரிய தரப்பிற்கு அறிவிக்க விமானப்படை நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


அதுமட்டுமல்லாமல் ஹெலிகொப்டர்களுக்கு மேலதிகமாக விமானப்படைக்கு சொந்தமான மூன்று ட்ரோன் குழுக்களும் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.


ஹெலிகாப்டர்கள் கீழ் வானில் பறப்பதை எண்ணி மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post