ஜனாஸா விடயத்தில் முஸ்லிம்கள் மனம் நொந்து போயுள்ளனர்; அரசின் உண்மை நிலைப்பாட்டினை நீதி அமைச்சர் அலி சப்ரி கூற வேண்டும்! வேலு குமார் எம்.பி கோரிக்கை!

ஜனாஸா விடயத்தில் முஸ்லிம்கள் மனம் நொந்து போயுள்ளனர்; அரசின் உண்மை நிலைப்பாட்டினை நீதி அமைச்சர் அலி சப்ரி கூற வேண்டும்! வேலு குமார் எம்.பி கோரிக்கை!


கொரோனவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பான அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை நீதி அமைச்சர் அலி சப்ரி கூற வேண்டும் என சபையில் வலியுறுத்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலு குமார் அரசாங்கத்தின் சகல பலவீனங்களையும் கொரோனாவை முன்னிலைப்படுத்தி அதில் மறைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாவும் அவர் குற்றம் சுமத்தினார்.


நாடாளுமன்றத்தில் இன்று (12) 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 


அவர் மேலும் கூறுகையில்,


கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் சமய சம்பிரதாயங்களை மீறி எரிக்கப்படும் விடயத்தினால் முஸ்லிம் மனமுடைந்துள்ளனர். இது விடயத்தில் மிக விரைவில் அரசாங்கத்திடம் தீர்வொன்றைத் தேடி நிற்கும் சமூகமாக அவர்கள் காணப்படுகின்றனர்.


இது தொடர்பில் நீதி அமைச்சர் அறிவிப்பொன்றை விடுத்திருந்தார். முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஜனாதிபதி அனுமதி இருப்பதாகக் கூறுகின்றபோதும், தமக்கு இதுபற்றித் தெரியாது என அமைச்சரவையில் இருப்பவர்கள் கூறகின்றனர். இதற்கு இடமளிக்கக் கூடாது என மொஹமட் முஸம்மில் பத்திரிகையில் கூறியுள்ளார்.


$ads={2}


ஜனாஸாக்கள் அடக்கம் செய்வது தொடர்பான அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை சபையில் இருக்கும் அமைச்சர் அலி சப்ரி கூறவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post