தப்பிச் சென்ற பெண்ணை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தப்பிச் சென்ற பெண்ணை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!


கொரோனா வைரஸ் தொற்றுடன் IDH வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், தனது குழந்தையுடன் தப்பிச் சென்ற பெண்ணை கண்டறிவதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடுகின்றனர்.


அதன்படி, குறித்த பெண் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் 119 அல்லது 0112 43 33 33 என்ற பொலிஸ் அவசர பிரிவு இலக்கத்திற்கு அல்லது பொலிஸ் தலைமையகத்தின் 0112 42 11 11 என்ற இலக்கத்திற்கோ அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


குறித்த பெண்ணை கண்டறிவதற்காக 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.


அதற்கு மேலதிகமாக, சுகாதார பிரிவினரும், ஏனைய பிரிவினரும் வெள்வேறு இடங்களில் தேடுதல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


$ads={2}


இரத்தினபுரி - எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த 25 வயதான குறித்தப் பெண், நேற்றுமுன்தினம் இரவு 9.00 மணி அளவில் தமது இரண்டரை வயதான குழந்தையுடன் IDH மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார்.


எஹெலியகொட பிரதேசத்திலுள்ள தப்பிச் சென்றப் பெண்ணின் வீட்டிலிருந்து நேற்று காலை குறித்த இரண்டரை வயதான குழந்தை மாத்திரம் மீட்கப்பட்டது.


இந்நிலையில், குறித்த பெண்ணை தேடும் பணியில் பொலிஸார் தொடர்ந்தும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.