அரசாங்கம் கொடுத்த 5 ஆயிரம் ரூபா ஒரு வாரத்திற்கு அல்ல! விமல் வீரவன்ச நாடாளுமன்றில் தெரிவிப்பு!

அரசாங்கம் கொடுத்த 5 ஆயிரம் ரூபா ஒரு வாரத்திற்கு அல்ல! விமல் வீரவன்ச நாடாளுமன்றில் தெரிவிப்பு!


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு மாவட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒரு வாரத்திற்குள் செலவு செய்து விட்டு தற்போது எதுவும் இல்லை எனக் கூறுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


ஒரு வாரத்தில் செலவு செய்வதற்காக இந்த 5 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படவில்லை. கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் விசாரித்த பின்னரே இதனை நான் கூறுகின்றேன் எனவும் அமைச்சர் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


கொழும்பில் மூடப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் இல்லை எனவும் அவர்கள் வீதியில் இறங்கி போராடி வருவதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டிருந்தார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post