பசில் ராஜபக்ஷ கட்டாயம் நாடாளுமன்றில் இருக்க வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தெரிவிப்பு!

பசில் ராஜபக்ஷ கட்டாயம் நாடாளுமன்றில் இருக்க வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தெரிவிப்பு!


பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவது அத்தியாவசியம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்திற்கு வரவுள்ள தினத்தை பசில் ராஜபக்ஷ இன்னும் பகிரங்கமாக வெளியிடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.


பசில் ராஜபக்ஷ தீர்மானத்தை எடுக்கும் தினத்தில் தானும் தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாகவும் கெட்டகொட கூறியுள்ளார்.


$ads={2}


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை மாத்திரமல்ல அரசாங்கத்தை பசில் ராஜபக்ஷவினாலேயே முன்னெடுத்துச் செல்ல முடியும். இதனால் அவர் நாடாளுமன்றத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் அதற்கு இடமளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்காக, ஜயந்த கெட்டகொட தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post